MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாக பழி: கம்பீர் ஆதரவால் சர்பராஸ் கான் நெகிழ்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாக பழி: கம்பீர் ஆதரவால் சர்பராஸ் கான் நெகிழ்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாக பழி: கம்பீர் ஆதரவால் சர்பராஸ் கான் நெகிழ்ச்சி

விளையாட்டு

டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாக பழி: கம்பீர் ஆதரவால் சர்பராஸ் கான் நெகிழ்ச்சி

Sri Prem Kumar R
Last updated: நவம்பர் 22, 2026 6:23 காலை
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான்
இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான்
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை கசியவிட்டதாக தன் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு குறித்தும், அந்த இக்கட்டான சூழலில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அளித்த ஆதரவு குறித்தும் இந்திய வீரர் சர்பராஸ் கான் மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா உடனான நேர்காணலில், தான் அனுபவித்த மனவேதனைகளை அவர் விரிவாக பகிர்ந்து கொண்டார்.

கடந்த 2024-25 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்கு பிறகு, இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் கம்பீர் ஆவேசமாக பேசிய விவகாரம் ஊடகங்களில் வெளியானது. இந்த தகவல்களை சர்பராஸ் கான்தான் கசியவிட்டார் என சமூக வலைதளங்களில் அவர் மீது பழி சுமத்தப்பட்டது. இது குறித்து சர்பராஸ் கான் கூறியதாவது, 'அப்போது என் செல்போனை அணைத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்பீர் சார் எனக்கு 2 முறை போன் செய்தார். இவையெல்லாம் தேவையற்ற வீண் பேச்சுகள், இந்த அரசியலில் தலையிடாமல் விளையாட்டில் மட்டும் உன் கவனத்தை செலுத்து' என்று அவர் என்னிடம் கூறினார்.

அதற்கு நான், 'சார், எனக்கு இது புரிகிறது; ஆனால் என் தந்தை மிகவும் சோகமாக இருக்கிறார், என் மனைவி தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார்' என்று அவரிடம் சொன்னேன். கம்பீர் சார் என் தந்தை நௌஷாத் கானிடம் போனில் பேசி, 'இதுபோன்ற வீண் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள்; சர்பராஸ் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், அவரை கிரிக்கெட் விளையாட விடுங்கள்' என்று ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை எந்த நேரத்திலும் அழைக்குமாறு என் தந்தையிடம் உறுதியளித்தார். அந்த கடினமான சூழலில் எனக்கு முதல் ஆளாக போன் செய்து பேசியதே கம்பீர்தான் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சை உருவான போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விவரித்த சர்பராஸ் கான், 'நான் மிகவும் காயப்பட்டேன். விமானத்தில் இருந்து நான் கீழே இறங்கிய உடனேயே எனக்கு தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வரத் துவங்கின. சமூக வலைதளங்களில் என்னை பற்றி அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருந்தன. பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்து 20 முதல் 25 நாட்கள் ஆகிவிட்டன. அந்த தொடரின் போது எனக்கு அடிபட்டதால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் சிகிச்சை எடுத்து வந்தேன். அப்போது திடீரென டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை நான் கசியவிட்டதாக என் மீது பழிபோட்டு செய்திகள் பரவின. நான் யாரிடம் சென்று பேசுவது என்றே தெரியாமல் தவித்தேன்' என்று வேதனை தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த சர்பராஸ் கான், 'நான் யாரிடம் சென்று நியாயம் கேட்பது? இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்திருந்தால் என்னை இந்தியா ஏ அணிக்கும், அதன்பின் இலங்கை டெஸ்ட் தொடருக்கும் எப்படி தேர்வு செய்திருப்பார்கள்? இதை யார் கிளப்பிவிட்டார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் மனமுடைந்து போனேன். நான் யாருக்காவது போன் செய்தால் என் அழைப்பை கூட யாரும் எடுக்கவில்லை. அது என் குடும்பத்திற்கு மிகக் கொடுமையான காலமாக அமைந்தது' என்று கூறினார்.

'என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்தது; அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என் தந்தை, தாய், மனைவி மற்றும் தம்பியை நினைத்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். சமூக வலைதளங்களில் ஒரு சிறிய விஷயம் கூட மிகப்பெரிய பூதாகரமாக மாற்றப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு பழமொழியை நான் கேட்டிருக்கிறேன். ஒருவரின் வேலையை உங்களால் கெடுக்க முடியாவிட்டால், அவரது பெயரை கெடுத்துவிடுங்கள்… அப்போது அவருடைய வேலை தானாகவே கெட்டுவிடும் என்பார்கள். அதுதான் எனக்கும் நடந்தது' என்று தெரிவித்தார்.

இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான், ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 37.10 சராசரியில் 371 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் இருந்தும் விளையாடும் வாய்ப்பு பெறாத அவர், பின்னர் 2026 இலங்கை தொடரில் காயம் அடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட போதும் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dressing Room SecretsGautam GambhirIndian Cricket TeamSarfaraz Khanஇந்திய கிரிக்கெட் அணிகவுதம் கம்பீர்சர்பராஸ் கான்டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை குறைவு குறித்த செய்தி வெளியீடு தங்கம் விலை சரிவு: நகை வாங்குவோருக்கு குதூகலம்!
Next Article புதிய கார் மாடல்கள் அறிமுகம் பற்றிய செய்தி டிசம்பரில் அசத்தும் 4 புதிய கார் மாடல்கள் அறிமுகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில்
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் 159 ரன்கள்: நிதிஷ் ரெட்டி, ரஷித் கான் அதிரடி

டெல்லியில் நடந்த 2வது டி20 போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது. நிதிஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2 Min Read
விளையாட்டு

IPL 2026: அண்டர்டேக்கர் போல் மீண்டு எழுந்த KKR அணி.. பிளே ஆப்க்கு தகுதி பெற முடியுமா?

பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில் கேகேஆர் அணி, அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் ஒரு அற்புதமான கம்பேக்கை நிகழ்த்தியுள்ளது. ஆறு தொடர் தோல்விகளுக்குப் பின் நான்கு தொடர் வெற்றிகளைப்…

2 Min Read
விளையாட்டு

டெஸ்டில் 14,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் கடந்த எலைட் கிளப்பில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இணைந்தார். சச்சினுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் இவரே. நியூசிலாந்துக்கு…

2 Min Read
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் ஆலன் பார்டர் விருதை ஏந்தியபடி
விளையாட்டு

டிராவிஸ் ஹெட்க்கு ஆலன் பார்டர் விருது: ஒரு வாக்கு வித்தியாசத்தில் சாதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆலன் பார்டர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?