உக்ரைன் மீது ரஷியா ஹைப்பர்சோனிக் தாக்குதல்: 4 பேர் பலி

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது ரஷியா அதிநவீன 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு நேற்று அதிகாலை மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக நீடிக்கும் இந்தப் போரில் இது மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகப் பாயக்கூடிய இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை, விண்கல் போல அதிவேகமாகப் பயணிப்பதால், தற்போதைய எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இதைத் தடுத்து அழிக்க முடியாது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷியா இந்த பயங்கரமான ஏவுகணையைப் பயன்படுத்துவது இது மூன்றாவது முறையாகும்.

நேற்று ஒரே இரவில் மட்டும் 600 தற்கொலை டிரோன்கள் மற்றும் 90 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவி ரஷியா பெரும் தாக்குதல் நடத்தியது. இந்த மிகப்பெரிய தாக்குதலில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷியாவின் இந்த தொடர் தாக்குதல்கள் உக்ரைனில் பெரும் சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. சர்வதேச அளவில் இந்தத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version