திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு

திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்துவதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு நீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகிறது.

வெயில் காரணமாக பக்தர்களுக்கு தங்கும் அறைகளை வழங்க தேவஸ்தானம் சுனிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தினர் இல்லாமல் தனியாக வந்த நபர்களுக்கு அறைகளை வழங்கவில்லை. குடும்பத்தினருடன் வரும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 67,222 பேர் தரிசனம் செய்தனர். 38,188 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version