MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரோஹித் சர்மா டிப்ஸ்: இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன் – கசான்பர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரோஹித் சர்மா டிப்ஸ்: இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன் – கசான்பர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ரோஹித் சர்மா டிப்ஸ்: இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன் – கசான்பர்

விளையாட்டு

ரோஹித் சர்மா டிப்ஸ்: இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன் – கசான்பர்

Admin
Last updated: ஜூன் 10, 2026 10:51 மணி
Admin
Share
SHARE

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 13ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரில், ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசான்பர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்தி வெற்றி பெறப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய 20 வயதான கசான்பர், மெகா ஏலத்தில் 4.8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத இவர், இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 10.01 எகானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்து கசான்பர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இது குறித்து கசான்பர் கூறுகையில், 'ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த வீரர் மற்றும் ஜாம்பவான். ஐபிஎல் தொடரின் போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக, நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் எனக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த அந்த ஆலோசனைகளை அவருக்கு எதிராகவே இந்த தொடரில் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்' எனத் தெரிவித்தார். மேலும், ஐபிஎல் அனுபவம் குறித்து பேசிய அவர், 'மிகச்சிறந்த முன்னணி வீரர்கள் மற்றும் அற்புதமான பயிற்சியாளர்களுடன் இணைந்து விளையாடியதும், ஒரே அறையை பகிர்ந்து கொண்டதும் எனக்கு பல புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட் என்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விளையாட்டு. நான் எதிர்காலத்திலும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றும் கூறினார்.

இந்தியாவின் தற்போதைய கடுமையான வெயிலை சமாளிக்க ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உதவும் என்றும், காபூலில் ஒரு மாதம் பயிற்சி முகாமில் ஈடுபட்டதால் ஆடுகளம் மற்றும் வானிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கசான்பர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அணியில் தற்போது அதிக திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருவதாகவும், கடின உழைப்பு, முழு நம்பிக்கை மற்றும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricketஅல்லா கசான்பர்ஆப்கானிஸ்தான்இந்தியாகிரிக்கெட்ரோஹித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி-வங்கதேசம் ஒருநாள் தொடர்: நாளை தொடக்கம்
Next Article முதலமைச்சர் விஜய் டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: சிஎஸ்கே அணியுடன் லக்னோவுக்கு புறப்பட்ட தோனி.. போட்டியில் பங்கேற்க திட்டம்

காயம் காரணமாக ஒரு போட்டியிலும் விளையாடாத தோனி, மே 15 அன்று நடைபெறவுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டிக்கு சிஎஸ்கே அணியுடன் லக்னோ…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: பட்லர் என்னுடைய பாக்கெட்டில்.. விக்கெட்டை வீழ்த்திய பின் ஜடேஜா மாஸ் கொண்டாட்டம்

லக்னோ: ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்து, தனது தனித்துவமான பாக்கெட் கொண்டாட்டத்தின்…

2 Min Read
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமான் அலி, 39 வயது 217 நாட்களில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, 130 ஆண்டுகளுக்குப் பிறகு வயதில் மூத்த சுழற்பந்து வீச்சாளர்…

2 Min Read
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: மானவ் சுதர் டெஸ்ட் அறிமுகம்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி சண்டிகரில் தொடங்கியது. இந்திய அணியில் இளம் வீரர் மானவ் சுதர் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். டாஸ்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?