சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலி – ஆர்.பி. உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் தற்போது 'ரீல்ஸ் ஆட்சி' தான் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மேகதாது அணை, காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி, வருசநாடு மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், இது குறித்து முதலமைச்சருக்கோ அல்லது பொறுப்பு அமைச்சருக்கோ தெரியுமா என்றும் அவர் கவலை தெரிவித்தார். இப்பிரச்சனையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லாத த.வெ.க. அரசு, எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவதாக ஆர்.பி. உதயகுமார் சுட்டிக்காட்டினார். 2029-ல் நாடு தழுவிய அளவில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைபெற உள்ளதாகவும், அப்போது இந்த ஆட்சி நிச்சயம் இருக்காது என்றும் அவர் கூறினார். தன்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்திற்கு சென்றிருந்தால், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தியிருப்போம் என்றும், எதிர்கட்சியின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் தற்போதைய அரசுக்கு அது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள சூழலில் 75 சதவீத மக்கள் இந்த அரசுக்கு வாக்களித்ததை எண்ணி வேதனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் ராஜாபோல் வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆர்.பி. உதயகுமார் வருத்தம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தற்போது ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் இதே ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் அவர் தொண்டர்களை கேட்டுக்கொண்டார். இந்த கருத்துக்களை அவர் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version