தங்க காசு என நினைத்து மக்கள் திரண்டனர்: செம்பு காசுகளால் பரபரப்பு

ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version