MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கடன் தொல்லையா? குடும்பப் பிரச்சனையா? போலீஸ் விசாரணை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கடன் தொல்லையா? குடும்பப் பிரச்சனையா? போலீஸ் விசாரணை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கடன் தொல்லையா? குடும்பப் பிரச்சனையா? போலீஸ் விசாரணை!

சினிமா

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கடன் தொல்லையா? குடும்பப் பிரச்சனையா? போலீஸ் விசாரணை!

Admin
Last updated: மே 18, 2026 12:59 மணி
Admin
Share
SHARE

பிரபல சினிமா தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே.ராஜன் (85 வயது), சென்னையில் உள்ள அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 5 வருடங்களாக தனி ஹோட்டலில் வசித்து வந்த ராஜனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை, தனது கார் ஓட்டுநர் தனசேகரனுடன் காரில் வேளச்சேரிக்குச் சென்ற ராஜன், அடையாறு மேம்பாலம் அருகே வந்தபோது, 'காரை நிறுத்துப்பா… நான் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்' எனக் கூறிவிட்டு காரிலிருந்து இறங்கியுள்ளார். சிறிது தூரம் நடந்த அவர், திடீரென மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ராஜனின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கே.ராஜனின் மறைவு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் பிரபு இயக்குனராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராஜன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தனியாக வசித்து வந்துள்ளார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கே.ராஜன் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சனை இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் சிக்கலா, தனிமைப் பிரச்சனையா அல்லது உடல்நலக் குறைபாடா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது கார் ஓட்டுநரிடமும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai NewsTamil Cinemaகடன் பிரச்சனைகே.ராஜன்தயாரிப்பாளர்தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா நெக்ஸான் vs நிசான் மேக்னைட்: எது சிறந்தது?
Next Article முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள்: முக்கிய ஆலோசனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரப்பூர்வமாக முடித்து…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

நடிகர் விஜய் சேதுபதி 'டெலிவரி பாய்' பட டீசரை வெளியிடுகிறார்
சினிமா

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ பட டீசர்!

நடிகர் விஜய் சேதுபதி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா நடிக்கும் இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

1 Min Read
சினிமா

‘காஞ்சனா 4’ல் நயன்தாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

'காஞ்சனா 4' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஜெயிலர் 2: ரஜினியுடன் ஹிருத்திக் ரோஷன் இணைகிறாரா?

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

பிரபாஸின் பிரமாண்ட பங்களா: ரூ.180 கோடி செலவில் வீடு!

நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் சுமார் ரூ.180 கோடி செலவில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவைக் கட்டி வருகிறார். இதில் நீச்சல் குளம், தியேட்டர், ஜிம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?