MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கண்டனம்

தமிழ்நாடு

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 9, 2026 4:23 மணி
Fernandez
Share
உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன்
SHARE

சமூகநீதியைச் சீர்குலைத்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் நோக்கில் த.வெ.க. அரசு அவசர அவசரமாக தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல், முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் எம்.எல்.ஏ.க்களைக் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில்கூட, த.வெ.க. அரசின் ஆணவ நடவடிக்கைகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும். எனவே, நேற்று நிறைவேற்றப்பட்ட 'தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா – 2026'க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில், தனியார் பல்கலைக்கழகம் அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் அளவு மற்றும் நிரந்தர வைப்பு நிதிக்கான (Permanent Endowment Fund) தொகையில் அதிரடி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2019 சட்டப்படி, சென்னை மாநகர எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் மற்றும் 50 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி தேவைப்பட்டது. ஆனால், த.வெ.க. அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தை திருத்தி, சென்னை மாநகர எல்லைக்குள் 12 ஏக்கர், மற்ற முனிசிபல் லிமிட்டிற்குள் 18 ஏக்கர், கிராமப்புறங்களில் 25 ஏக்கர் என நிலத்தின் அளவைக் குறைத்துள்ளது. மேலும், நிரந்தர வைப்பு நிதியையும் 50 கோடியிலிருந்து 25 கோடியாகக் குறைத்துள்ளது.

உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் ஆகஸ்ட் 24, 2026 அன்றே முடிவடைந்த நிலையில், 15 நாட்கள் கழித்து கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்ன என்று அமைச்சர் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குறைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் சலுகை, ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும் பின்தேதியிட்டு நீட்டிக்கப்படுவது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். தனியார் பல்கலைக்கழகம் திவாலானால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே நிரந்தர வைப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அதை பாதியாகக் குறைப்பதன் மூலம், மாணவர்களின் பாதுகாப்பிற்கு த.வெ.க. அரசு உலை வைக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"கஜானா காலி" எனக் கூறி மக்கள் தலையில் வரிச்சுமையை ஏற்ற முயற்சிக்கும் த.வெ.க. அரசு, ஏற்கனவே அதீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வருவது ஏன் என்றும், அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த முடியாமல், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கவே உயர்கல்வி மானியக் கோரிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கான நிதி 100 கோடி ரூபாய் குறைக்கப்பட்டதா என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்தத் தளர்வுகளுக்கு யார் யார் கோரிக்கை வைத்தார்கள் என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று, புற்றீசல் போல் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவானால், பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுப் பல்கலைக்கழகங்களின் நிலை என்னவாகும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

முந்தைய திராவிட மாடல் அரசின் ஆட்சியில், தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் சலுகை அளிக்கக் கோரிக்கை வந்தபோது, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து முதலமைச்சர் அந்த முயற்சியைக் கைவிட்ட உத்தரவிட்டதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, உயர்கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து, சமூகநீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், புதிய தளர்வுக் கொள்கை அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் இந்த சட்டத் திருத்தத்தை த.வெ.க. அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோ.வி. செழியன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amendment Billhigher educationK.V.S. ChezhianPrivate UniversityT.V.K GovernmentTamil Naduஉயர்கல்விகோ.வி.செழியன்சட்டத் திருத்தம்த.வெ.க அரசுதமிழ்நாடுதனியார் பல்கலைக்கழகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தி.மு.க. எம்.பி. கனிமொழி தவெக அரசின் அலட்சியம்: கனிமொழி எம்.பி. கேள்வி
Next Article விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மறுதேர்வு எழுத மாணவர்களுக்கு கர்நாடகா வி.டி.யு பல்கலைக்கழகம் வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை…

2 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

அமித் ஷா கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்விகளை எதிர்கொள்ள தயக்கம் காட்டுவது ஏன் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது…

1 Min Read
பேரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி கணேசன்
தமிழ்நாடு

தவெக MLAவிடம் பேரம்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

தவெக MLAவிடம் திமுக நிர்வாகி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் உட்பட 3 பேர் கைது. 35 முதல் 50 கோடி வரை…

1 Min Read
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) லோகோ
தமிழ்நாடு

மத்திய அரசு வேலை: 2,536 கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) 2,536 கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 07.09.2026 முதல் 07.10.2026 வரை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?