பிரபாஸின் பிரமாண்ட பங்களா: ரூ.180 கோடி செலவில் வீடு!

பாகுபலி படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது பான் இந்தியா படங்களின் நாயகனாக வலம் வருகிறார். பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கும் அவர், சமீபத்தில் 'தி ராஜாசாப்' படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது 'கல்கி-2', 'ஸ்பிரிட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவைக் கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமானச் செலவு மட்டும் சுமார் ரூ.180 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பங்களாவில் நீச்சல் குளம், தனி திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் போன்ற பல ஆடம்பர வசதிகள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபாஸ் கட்டும் இந்த புதிய வீட்டின் மாதிரி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

பாகுபலி படத்திற்குப் பிறகு இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபாஸின் இந்த பிரம்மாண்ட வீடு, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version