மாதவிடாய் விரைவில் வர பப்பாளி பழம் சாப்பிடலாமா?

சில பெண்கள் வீட்டில் விசேஷ நாட்கள் அல்லது பூஜைகள் இருக்கும்போது, மாதவிடாய் வருவதைத் தவிர்க்க ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். ஆனால், இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இயற்கையான உணவுகள் மூலம் மாதவிடாயை விரைவில் வரவழைப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

மாதவிடாயை விரைவில் வரவழைக்க உதவும் உணவுகளில் முதன்மையானது பப்பாளி பழம். இது உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கி, மாதவிடாயை விரைவில் தூண்ட உதவுகிறது. மேலும், பப்பாளியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு டம்ளர் குடிப்பது மாதவிடாயை சில நாட்கள் முன்னதாக வரவழைக்க உதவும். அத்துடன், எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாட்களுக்கு முன் சாப்பிடுவது மாதவிடாயை விரைவில் வரவழைக்க உதவும். அன்னாசி பழமும் உடலில் உஷ்ணத்தை அதிகரித்து, மாதவிடாயை விரைவில் வரவழைக்க உதவும் ஒரு சிறந்த உணவாகும்.

இவை தவிர, சீரகம், இஞ்சி, கொத்தமல்லி விதைகள், பெருஞ்சீரகம் விதைகள், மாதுளை, வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கேரட், வெல்லம், மஞ்சள், பேரிட்சை, பூசணிக்காய், பாதாம், திராட்சை, முட்டை போன்றவையும் பெண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகளாகும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version