நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டினர் மாயம்!

நேபாளத்தில் சீறிப்பாய்ந்து வரும் வெள்ளம்.

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திபெத் எல்லையிலிருந்து பாயும் போட்டே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தால், ராசுவா பகுதியில் காணாமல் போன 384 சுற்றுலாப் பயணிகளில் 100க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 105 இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும், 111 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டினர் இந்த பேரழிவில் மாயமாகியுள்ளனர்.

திமூர் மற்றும் சியாப்ரு பகுதிகளில் வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்புப் படை முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள இந்திய யாத்ரீகர்கள் பலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெள்ளத்தால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், யாத்ரீகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளம் – திபெத் எல்லை வழித்தடத்திலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவின் தீவிரத்தை உணர்த்துகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version