நேபாள வெள்ளம்: உறவினர்களைத் தொடர்புகொள்ள 24 மணி நேர உதவி எண்கள்

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, அங்கு சிக்கித் தவிக்கும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தகவல்களை அறிய, இந்திய அரசு 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேபாளத்தின் அண்டை நாடான திபெத்தில், புதிதாக ஒரு பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாகவும், அது உடைந்தால் நேபாளத்தில் மேலும் பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஏரி, நேபாள எல்லைக்கு அருகே உள்ள சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகியுள்ளது. இதன் கொள்ளளவு ஏற்கனவே 7.6 கோடி கன அடியை தாண்டி வழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் 10.60 கோடி கன அடி தண்ணீர் சேரும் என கணிக்கப்பட்டுள்ளது.

நேபாள – திபெத் எல்லைப் பகுதியான ராசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதில் 300 இந்தியர்களும் அடங்குவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பனிப்பாறை சரிவால் ஏற்பட்டதே தவிர, நிலநடுக்கத்தால் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க, தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 40க்கும் மேற்பட்ட தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேபாள சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 33க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாயமாகியுள்ளனர்.

குறிப்பாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என, இந்தியாவைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேர், மலேசியாவைச் சேர்ந்த 51 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், நேபாளத்தில் நீர் மின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 9 தொழிலாளர்களும் காணாமல் போயுள்ளனர்.

இந்தியர்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக, மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள்: +91 11 2308 8718, +91 11 2308 8719, +91 11 2301 2113. வாட்ஸ்அப் எண்: +91 9968291988. மின்னஞ்சல் முகவரி: mea.gov.in.

காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள: +977 985 131 6807, +977 970 910 7500, +977 981 032 6117. இந்த எண்களில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள: +86 18514284905 (வாட்ஸ்அப் வசதியும் உண்டு).

நேபாள அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசர எண்கள்: சுற்றுலாப் போலீஸ்: +977 9851289445, நேபாள ராணுவம்: +977 9851072914, NDRRMA: +977 9851320269 / +977 9849281097, போலீஸ்: +977 9851254960. மேலும், ராசுவா, நுவாகோட், டாட்டிங், சித்வான் மாவட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version