வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய்

மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது, நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஏராளமான சத்துக்களை வழங்குகிறது. ஏனெனில், இதில் பல வைட்டமின்கள் உள்ளன.

உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஒரு நெல்லிக்கனி மூன்று ஆப்பிள்களுக்கு சமம். இதில் புரதம், வைட்டமின் சி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

வயிற்றுப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் 'திரிபலா' சூரணம் தயாரிப்பில் நெல்லிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற பழங்களை விட நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

தினமும் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்காய்களைச் சாப்பிடுவது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த சோகைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நெல்லிக்காய் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நோயிலிருந்து முழுமையாக குணம் பெறலாம். மேலும், இது பசிப் பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும்போது, அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடலைப் பாதுகாக்கிறது. எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது, நெல்லிக்காயில் இது அதிகளவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

தற்காலத்தில் உள்ள பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய் ஒரு சிறந்த துணையாக விளங்குகிறது. சித்த மருத்துவத்தில் பல மருந்துகளில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க நெல்லிக்காய் வல்லமை பெற்றது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version