முதல்வர் விஜய்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான பி. அய்யாக்கண்ணு மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பான ரூ.317 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முதல்வரிடம் ஒரு மனுவை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தருவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version