MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேசியக் கொடி ஏற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேசியக் கொடி ஏற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேசியக் கொடி ஏற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

தமிழ்நாடு

தேசியக் கொடி ஏற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 15, 2026 6:30 காலை
Fernandez
Share
இந்திய தேசியக் கொடி அசோகச் சக்கரத்துடன் பறக்கிறது
இந்திய தேசியக் கொடி
SHARE

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேசியக் கொடியை ஏற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்யக்கூடாத தவறுகள் குறித்து பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தேசியக் கொடி என்பது காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களையும், நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரத்தையும் கொண்டுள்ளது. கொடியை ஏற்றும்போது, காவி நிறம் மேலாகவும், பச்சை நிறம் கீழாகவும் இருக்க வேண்டும். கொடியை தலைகீழாக ஏற்றுவது அவமரியாதைக்குரிய செயலாகும். சில சமயங்களில், காங்கிரஸ் கட்சியின் கொடியின் வடிவமைப்பும் தேசியக் கொடியின் வடிவமைப்பும் ஒரே மாதிரி இருப்பதால், கொடியை மாற்றி ஏற்றும் சம்பவங்களும் நிகழலாம். எனவே, இது தேசியக் கொடிதான் என்பதை உறுதி செய்த பின்னரே ஏற்ற வேண்டும்.

மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், இதுகுறித்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காகிதத் தாள்களைப் போல பிளாஸ்டிக் உடனடியாக மட்கும் பொருள் இல்லை என்பதால், தேசியக் கொடியின் கண்ணியத்தைக் காப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.

தேசியக் கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971, பிரிவு 2-ன் படி, தேசியக் கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டால், மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இது ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய சட்டமாகும்.

2002 ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் தேசியக் கொடியை பயன்படுத்த உரிமை உண்டு. தேசியக் கொடியை சூரிய உதயத்திற்குப் பிறகுதான் ஏற்ற வேண்டும். அதேபோல், சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக, அதாவது மாலை 6 மணிக்குள் இறக்கிவிட வேண்டும். 2005 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தேசியக் கொடியை இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது, கால்சட்டையாக அணியக்கூடாது போன்ற விதிமுறைகள் மேம்படுத்தப்பட்டன.

தேசியக் கொடியை கையால் நெய்த காதி துணியில் மட்டுமே செய்ய வேண்டும். கொடியை விரைவாகவும், எக்காள ஒலியுடனும் ஏற்ற வேண்டும். இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்கவிடக் கூடாது. மேலும், சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.

கார்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட விரும்பினால், அதை நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில் மட்டுமே பொருத்த வேண்டும். தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மற்ற கொடிகள் பல இருக்கும்போது, அனைத்து கொடிகளுக்கும் முன்பாக தேசியக் கொடி இருக்க வேண்டும்.

தேசியக் கொடியின் காவி நிறம் தூய்மையையும் கடவுளையும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும், பச்சை நிறம் பசுமையையும் செம்மையையும் குறிக்கின்றன. எனவே, இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி, நமது தேசியக் கொடிக்கு உரிய மரியாதையை அளிப்போம்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Independence DayNational FlagRulesஇந்தியக் கொடிசுதந்திர தினம்தேசியக் கொடிவிதிமுறைகள்விழிப்புணர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த சுற்றறிக்கை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
Next Article நடிகை ரிஷிகா சிங் யாஷ் டாக்ஸிக் டிரெய்லர் சர்ச்சை குறித்து கண்டனம் தெரிவிக்கும் காட்சி யாஷ் டாக்ஸிக் டிரெய்லர் சர்ச்சை: நடிகை ரிஷிகா சிங் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விசிக தலைவர் திருமாவளவன்
தமிழ்நாடு

‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டாம்: திருமாவளவன்

வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அவர்…

3 Min Read
பைக்கில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வருகின்றனர்
தமிழ்நாடு

பைக்கில் பதுங்கிய பாம்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்!

கோவையில் பைக்கின் சாவி துளைக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை கண்டு இளைஞர் அதிர்ச்சி. நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிமீ வாகன நெரிசல்!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் ஆயிரக்கணக்கான வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிமீ தூரத்திற்கு நீண்ட வரிசை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

1 Min Read
லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸியின் புகைப்படம்
தமிழ்நாடு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்: 68வது வயதில் இறுதி மூச்சு

லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், ஜார்ஜ் மெஸ்ஸி, தனது 68வது வயதில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?