நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கெட்ட பழக்கமாகும். இந்த பழக்கத்தால் நம் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. எனவே, இந்த பழக்கத்தை கைவிடுவது அவசியம்.
என்னால் நகங்களைக் கடிக்காமல் இருக்க முடியாது என நினைப்பவர்கள், முடிந்தவரை தனிமையில் இருக்கும்போது கைகளுக்கு கையுறை அணிந்து கொள்ளலாம். மேலும், நகங்களுக்கு அழகான நெயில் பாலிஷ் போடுவதன் மூலமும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் குறைக்கலாம். இந்த பழக்கத்தால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.
1. நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள்: நீங்கள் உங்கள் வாயில் வைத்து நகங்களை கடிக்கும் போதெல்லாம், அதில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் உங்கள் உடலுக்குள் சென்று பல்வேறு நோய்களை உண்டாக்கக்கூடும்.
2. தோல் காயமடைதல்: தொடர்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பதால், உங்கள் நகங்களைச் சுற்றி இருக்கக்கூடிய தோல் காயமடைந்து பாதிப்புக்குள்ளாகும்.
3. வலி, வீக்கம் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள்: நகம் கடிக்கும் பழக்கத்தால் நகத்தைச் சுற்றி வலி, வீக்கம், நகம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது பாக்டீரியா தொற்றுகளையும் ஏற்படுத்தும்.
4. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவுதல்: நகங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், நீங்கள் நகத்தை வாயில் வைக்கும்போது வாய் வழியாக உடலுக்குள் செல்கின்றன.
5. தொற்று நோய்கள்: நகம் கடிக்கும் பழக்கம் பல்வேறு தொற்று நோய்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.
6. வாய் துர்நாற்றம்: தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
7. உளவியல் பிரச்சனைகள்: சிலருக்கு, நகம் கடிக்கும் பழக்கம் என்பது தீவிரமான உளவியல் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
8. மருத்துவரை அணுக வேண்டிய அவசியம்: நீங்கள் பலமுறை நகம் கடிப்பதில் இருந்து வெளியே வர முயற்சித்தும் உங்களால் முடியாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒரு தீவிரமான பிரச்சனையாக இருக்கலாம்.

