MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 50 ஓவர் முழுமையாக ஆடுங்கள்: இந்திய அணியை விமர்சித்த முகமது கைஃப்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 50 ஓவர் முழுமையாக ஆடுங்கள்: இந்திய அணியை விமர்சித்த முகமது கைஃப்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 50 ஓவர் முழுமையாக ஆடுங்கள்: இந்திய அணியை விமர்சித்த முகமது கைஃப்

விளையாட்டு

50 ஓவர் முழுமையாக ஆடுங்கள்: இந்திய அணியை விமர்சித்த முகமது கைஃப்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 17, 2026 5:23 மணி
Sri Prem Kumar R
Share
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்
SHARE

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை படுமோசமாகச் சரிந்ததைக் கண்டித்து, 8வது வீரர் வரை பேட்டிங் செய்ய வீரர்கள் இருந்தும் 50 ஓவர்களை முழுமையாக விளையாடாமல் சொதப்பியது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் போட்டியில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோருடன் 8வது வீரர் வரை இந்திய அணியின் பேட்டிங் நீண்டதாக இருந்தது. ஆனால், இந்த மூன்று ஆல்-ரவுண்டர்களும் இணைந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். குறிப்பாக, சிவம் துபே தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். இஷான் கிஷனும் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

விராட் கோலி 65 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 6 ஓவர்கள் மீதமிருந்த போதே இந்தியா சுருண்டதால், ஒரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தவித்தார்.

இதையடுத்து 234 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் பொறுப்பான 99 ரன்கள் உதவியால் 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தாலும், அவர்களை ஆல்-அவுட் செய்ய அது போதுமானதாக இல்லை. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது.

இது குறித்துப் பேசிய முகமது கைஃப், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் போது, நாம் எத்தனை ரன்கள் எடுக்கிறோம் என்பது அடுத்த விஷயம். ஆனால் முதலில் 50 ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டும் என்பதைத் தான் எங்கள் காலத்து சீனியர் வீரர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடமாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் நீண்ட பேட்டிங் வரிசை குறித்துப் பேசுகிறோம்.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 8வது வீரர் வரை நமக்கு பேட்டிங் வரிசை இருந்தது. ஆனால், இந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக விளையாடாமல் ஆட்டமிழந்தது மிகப்பெரிய ஏமாற்றமாகும் என்று விரக்தியுடன் அவர் கூறினார். இது போன்ற ஆட்டத்திறன் தொடர் தோல்விகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக இருந்தும், 50 ஓவர்களை முழுமையாக விளையாடாமல் சுருண்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு மீண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIndia vs EnglandMohammed Kaifஇங்கிலாந்துஇந்திய அணிஒருநாள் போட்டிபேட்டிங்முகமது கைஃப்விமர்சனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகிறார் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது ஏன்? துரை வைகோ விளக்கம்
Next Article நடிகர் தியான் சீனிவாசன் மற்றும் நடிகை நவ்யா நாயர் நான் சி.எம்-ஆக பதவியேற்கும் போது நீ புடவை கட்டி வரணும் – நடிகையை கிண்டலடித்த நடிகர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய ரயில்வே…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக்,…

ஜூலை 17, 2026

You Might Also Like

விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: சவுதி-உருகுவே த்ரில்லர் டிரா!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் க்ரூப் H லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் பிரிந்தன. மியாமியில்…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் மோசடி அம்பலம்: அயர்லாந்திடம் தொடரை இழந்த இந்திய அணி!

இந்திய அணி அயர்லாந்திடம் டி20 தொடரை இழந்தது, ஐபிஎல் பிட்ச்களின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. பேட்ஸ்மேன்களின் பலவீனம் வெளிப்பட்டது.

2 Min Read
வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் மைதானத்தில் உரையாடும் காட்சி
விளையாட்டு

சிஎஸ்கே பயிற்சியாளர்: வி.வி.எஸ். லக்ஷ்மன் நியமனம் குறித்து சடகோபன் ரமேஷ் கருத்து

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வி.வி.எஸ். லக்ஷ்மன் பொருத்தமானவர் என சடகோபன் ரமேஷ் மூன்று காரணங்களை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது நியமனம் அணிக்கு பலம் சேர்க்கும்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 18 வருட சாதனையை உடைத்த கானோலி!

ஐபிஎல் 2026 இல் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கூப்பர் கானோலி, தனது முதல் சீசனிலேயே 32 சிக்ஸர்கள் அடித்து சனத் ஜெயசூர்யாவின் 18 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?