MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடிய மோடி: மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடிய மோடி: மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடிய மோடி: மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடிய மோடி: மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: செப்டம்பர் 20, 2026 12:38 மணி
Fernandez
Share
காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம்தாகூர்
காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம்தாகூர்
SHARE

இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்துவிட்டதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம்தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வேலைவாய்ப்பு குறித்த வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி, 12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்தாடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இளைஞர்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கு மாறாக நாட்டில் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் ஆகஸ்ட் 2026 இல் வெளியிட்ட அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கிக் கிடப்பதாகவும், மேலும் 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்துள்ளதாகவும், பட்டம் பெற்ற பெண்களிடையே 20.4 சதவிகித வேலையின்மை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே செல்லவிடாமல் முடக்கும் சமூக-பொருளாதார நெருக்கடி என இரட்டைத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக மாணிக்கம்தாகூர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய புள்ளியியல் அமைச்சகம் செப்டம்பர் 2026 இல் வெளியிட்ட மாவட்ட அளவிலான காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கிக் கிடப்பதாகவும், கிட்டத்தட்ட 23.7 சதவிகித பகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித வேலை வாய்ப்பின்றி எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுவதாக மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர், திருவாரூர், மதுரை, சென்னை போன்ற மாவட்டங்களில் முறையே 24.9%, 23.9%, 23.8%, 22.4% என இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4% குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாக மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது என்றும், மோடி அரசில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உரிய பாடத்தை இந்திய இளைஞர்கள் நிச்சயம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressManickam TagoreModiUnemploymentகாங்கிரஸ்தமிழ்நாடுமாணிக்கம்தாகூர்மோடிவேலையில்லா திண்டாட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் அண்ணா பல்கலை. வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
Next Article குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம் என நேபாள பிரதமர்…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

பிஹாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது சாலை அமைக்காமலே பணம் எடுத்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்…

1 Min Read
நடிகர் விஜயை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை
தமிழ்நாடு

விஜய் போல் விநாயகர் சிலைகள்: கொருக்குப்பேட்டையில் களைகட்டும் விழா!

சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில், நடிகர் விஜயின் அரசியல் மற்றும் சினிமா தோற்றங்களை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் வெயில் தாக்கம் எப்போது குறையும்? – வெளியான தகவல்

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

1 Min Read
குற்றவாளி காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
தமிழ்நாடு

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் அதிரடி

நாகர்கோவில் காசி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?