மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு: தவெக பதிலடி

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என தவெக தனது ஐடி விங் மூலம் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட உடனேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இது மக்கள் விரும்பும் முதல்வர் வெற்றித் தலைவரின் மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு என்றும், தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி என்றும் தவெக குறிப்பிட்டுள்ளது.

குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக உறுதி அளித்துள்ளது. நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு செயல்படும் பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு என தவெக விமர்சித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் குறித்து உளறல்நிதி உண்மை பேசத் தயாரா என்றும், பொள்ளாச்சி சம்பவத்தில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மக்களின் இந்த நல்ல புரிதலைப் பார்த்து தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் பொறாமையில் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன. அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி என தவெக சாடியுள்ளது.

ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலும்பாளையத்திலும் அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை என தவெக தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version