MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

தமிழ்நாடு

பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 8:00 மணி
Fernandez
Share
அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை விதித்து அறிக்கை வெளியிடுகிறார்
பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை - அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை
SHARE

கல்விக்கூடங்கள் வெறும் விழாக்களின் கூடாரங்கள் அல்ல, அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பண்ணைகள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை என்றும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாரா நிகழ்வுகள் நடத்தக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல. அவை அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப் பண்ணையாகும். மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். மாணவர்களின் எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்க வேண்டும் என்றும், அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்ட வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். "அன்பு மாணவச் செல்வங்களே… நல்லதைப் படியுங்கள்! நன்றாகப் படியுங்கள்!" என்று அவர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

இந்த புதிய நெறிமுறைகள் மூலம், பள்ளி வளாகங்கள் கல்வி கற்பதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் உகந்த சூழலாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையற்ற இடையூறுகளைக் குறைக்கும் இந்த நடவடிக்கை கல்வித்துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ban on EventsEducation DepartmentMinister RajmohanSchool Campusesஅமைச்சர் ராஜ்மோகன்அரசுப் பள்ளிகள்கல்வித்துறைபள்ளி வளாகங்கள்மாணவர்கள்விழாக்கள் தடை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் மோகன்லால் நடித்துள்ள 'கிரீடம்' திரைப்படத்தின் மறுவெளியீடு குறித்த அறிவிப்பு 37 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலின் ‘கிரீடம்’ மீண்டும் திரையரங்குகளில்!
Next Article இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த தரவுகள் இந்தியாவில் தனியார் பல்கலைகள் அபரிமித வளர்ச்சி: அரசு பல்கலைகள் பின்தங்கிய நிலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

ஜூலை 9, 2026

வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்: வீட்டுக் கதவே பாலமானது!

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை, கிராம…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்…

ஜூலை 9, 2026

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர்…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

You Might Also Like

உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. முதல்வர் விஜய் வருகை குறித்த சர்ச்சையும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

22 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்? சி.வி.கட்சியில் பரபரப்பு!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பு மனு அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் தலைமையில் பட்ஜெட் தயாரிப்பு: தீவிர ஆலோசனை கூட்டம் தொடக்கம்

தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 22 வரை தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பட்ஜெட் ஜூலை…

1 Min Read
சத்யபாமா மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் திட்டம்: சத்யபாமா குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சத்யபாமா, எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?