MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழ்நாடு

ஒவ்வொரு வியாழனும் சத்தியமூர்த்தி பவனில் மனுக்கள்: அமைச்சர் ராஜேஷ்குமார்

Admin
Last updated: ஜூலை 3, 2026 6:45 காலை
Admin
Share
SHARE

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குறைகளைக் கேட்டறியும் பணியை அவர் இன்று தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார், 'தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடமிருந்து மனு பெறப்படும். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டறிய உள்ளோம். மாதத்தில் இருமுறை வருவாய் மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளோம்' என்று தெரிவித்தார்.

அணு கனிம சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தம் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றும், அப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனை பலமுறை சந்தித்து வலியுறுத்தியபோது, மக்களைப் பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என்று அவர் கூறியதாகவும், ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை அவரே கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மத்திய அரசு அதனைச் செய்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், அவர் கனிவுடன் கோரிக்கையைக் கேட்டறிந்து, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று விசாரிப்பதாகவும், மக்களைப் பாதிக்கும் திட்டத்தை கூட்டணி அரசு ஒருபோதும் செயல்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'மேகதாது விவகாரத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக விட்டுக்கொடுக்க மாட்டோம். சட்டத்தின் படி கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது. பாமக தலைவர் அன்புமணி, அந்தமானோடு ஒப்பிட்டு மேகதாது விவகாரத்தைப் பேசுவது பொருந்தாத ஒன்று. மேகதாது விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு ராகுல் காந்தி பிரதமராக வந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். அதனை நோக்கி எங்களுடைய பயணம் இருக்கும்' எனத் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் ராஜேஷ்குமார்காங்கிரஸ்சத்தியமூர்த்தி பவன்மனுக்கள்மேகதாது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பப்பாளி பழம், இலைகள்: மருத்துவ குணங்கள் ஏராளம்!
Next Article பிரதமர் மோடி பெயர் சொல்லி ராணுவ வீரரிடம் ரூ.8 லட்சம் மோசடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம்

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான சித்ரவதை ஆகாது என சென்னை…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

குருவாயூரில் ஒரே நாளில் 426 திருமணங்கள்: முக்கிய கட்டுப்பாடு!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 426…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

லஞ்சப் புகாரில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ சரவணன் ராஜினாமா? பரபரப்பு

சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ சரவணன் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் கட்சித் தலைமை விசாரணை நடத்தி வருகிறது. எம்.எல்.ஏ…

1 Min Read
அமைச்சர் வினோத் வேளாண் திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம்

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% வரை கூடுதல் மானியம் வழங்கப்படும். மின்மோட்டார், சூரிய…

1 Min Read
திமுக எம்பி கனிமொழி
தமிழ்நாடு

கனிமொழி எம்பி: கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?