அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் உடல்நலக் குறைவுகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும் என அமைச்சர் அருண்குமார் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, அமைச்சர் மதன் ராஜா தனது தந்தையை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாமல், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயர்தர சிகிச்சை கிடைக்கச் செய்துள்ளார். தற்போது அமைச்சரின் தந்தைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரின் இந்த செயல்பாடு, அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version