310 ஆண்டுகள் பழமை: திருப்பதி லட்டின் சுவாரஸ்யமான வரலாறு

உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு

உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு, தனது 310 ஆண்டுகால பாரம்பரியத்தை நிறைவு செய்துள்ளது. திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையான் தரிசனமும், அங்கு கிடைக்கும் சுவையான லட்டு பிரசாதமும்தான். பக்தர்கள் பணம் கொடுத்து கூடுதல் லட்டுகளை வாங்கி, தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த தனித்துவமான சுவைக்குக் காரணம் என்ன, இது எப்படித் தயாரிக்கப்படுகிறது, எப்போது இந்தப் பிரசாதம் வழங்கும் வழக்கம் தொடங்கியது போன்ற பல தகவல்கள் சுவாரஸ்யமானவை.

திருப்பதி லட்டு பிரசாதம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுவது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதன் வரலாற்றுப் பின்னணியும், தயாரிப்பு முறைகளும் பலருக்குத் தெரியாது. லட்டு தயாரிப்பதற்கும் கூட பிரத்யேகமான முறைகளும், விதிகளும் கடைபிடிக்கப்படுகின்றன. அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால், ஏழுமலையைக் கடந்து வந்து, ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புவதற்கு பக்தர்களுக்கு பல நாட்கள் ஆனது. எனவே, அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வசதியாகவும், எளிதில் கெட்டுப்போகாமலும் இருப்பதற்காக லட்டுக்களைப் பிரசாதமாகத் தயாரித்து வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் லட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், பக்தர்களுக்குப் பூந்தியாக இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர், 1803 ஆம் ஆண்டு முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அப்போது அதன் விலை ஒரு காலணா மட்டுமே. 310 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 'பொட்டு' எனப்படும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.

திருப்பதியில் மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 'அஸ்தானம்', 'கல்யாணோத்வசம் புரோக்தம்' என மூன்று வகைகளாக இவை தயாரிக்கப்படுகின்றன. விசேஷ நாட்களில் 750 கிராம் எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு, முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மற்ற லட்டுகளை விட அதிக அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது 'கல்யாணோத்வ லட்டு' தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 175 கிராம் ஆகும். நாள்தோறும் பல லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் குறைந்தது 5 லட்சம் லட்டுகள் வரை கையிருப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக இதன் சுவையும், மணமும் மாறாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாகும். லட்டின் தரத்தைப் பரிசோதிக்க, அடிக்கடி ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டும் வருகிறது.

2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் (Copyright) வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாராலும் இதைத் தயாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க லட்டு, பக்தர்களின் நம்பிக்கையையும், ஆன்மீக உணர்வையும் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version