அமைச்சர் காந்திராஜ் காவல் ஆய்வு சர்ச்சை: முதல்வர் விஜய் எச்சரிக்கை

தமிழக முதல்வர் விஜய்

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், நள்ளிரவில் காவல் நிலையங்களில் அதிரடி ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரக்கோணம் மற்றும் தக்கோலம் காவல் நிலையங்களில் அமைச்சர் மேற்கொண்ட இந்த ஆய்வு, பதிவேடுகளை புரட்டிப் பார்த்தல், சீருடை அணியாதது குறித்து கேள்வி கேட்டல், பெண் காவலரின் செல்போனை சோதனை செய்ததாக கூறப்படும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த ஆய்வுகள் அனைத்தும் வீடியோவாக வெளியிடப்பட்டு, அவை ரீல்ஸாக பகிரப்பட்டன.

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு காவல்துறையை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதா என்றும், காவல்துறை முதல்வர் விஜய்யின் உள்துறையின் கீழ் இருக்கும்போது இந்த தலையீடு சரியானதுதானா என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன. இந்த விவகாரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கவனத்திற்கும், ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்திற்கும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாக விதிமுறைகளை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்க்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதில், 'ஒதுக்கப்பட்ட துறையை தாண்டி மற்ற துறைகளில் தலையிடுவது நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய், அமைச்சர் காந்திராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. 'உங்கள் துறை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள், எல்லை தாண்டி மற்ற விஷயங்களில் தேவையற்ற தலையீடுகளை செய்யாதீர்கள்' என்று முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவையொட்டி, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் முதல்வர் விஜய் நேரில் சென்றிருந்தார். அப்போது அமைச்சர் காந்திராஜும் அங்கு உடனிருந்ததாகவும், முதல்வர் விஜய்யை அணுகி வணக்கம் தெரிவிக்கவும் பேசவும் முயன்றபோது, அவர் முகம் கொடுத்து பேசவில்லை என்றும் தவெகவினர் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version