MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

Admin
Last updated: மே 25, 2026 6:01 மணி
Admin
Share
SHARE

சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (25.05.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த உதவி வழங்கப்பட்டது.

திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை சாதனையாளர்களாக உருவாக்க விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். காதுக் கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்று, எதிர்வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆர்வமுள்ள தடகள வீராங்கனை செல்வி சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவி கோரியிருந்தனர். இவர்களின் பயிற்சி, உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளிலும், ஏனைய பன்னாட்டு அளவிலானப் போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ரூ.3 லட்சமும், நீச்சல் வீரர் அபிஷேக்கிற்கு ரூ.2.80 லட்சத்திற்கான காசோலையும் அமைச்சர் வழங்கினார். திறமையான வீரர்களுக்கு தேசிய மற்றும் உலக அளவில் பங்கேற்க தேவையான பொருளாதார உதவிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகளை நாள்தோறும் காலை 7 முதல் 10 மணி வரை என்னை நேரில் சந்திக்கலாம் என்றும், விளையாட்டுத் துறை உயர் அலுவலர்களும் காலை 7 மணி முதல் நேரு உள்விளையாட்டரங்கில் வீரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உடன் பணிபுரிவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டரங்கங்கள், பயிற்சிக் கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sports Aidஅமைச்சர் ஆதவ் அர்ஜுனாதமிழ்நாடு அரசுநிதியுதவிவிளையாட்டுவிளையாட்டு வீரர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 15 நாட்களில் 25 கொலைகள்: முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி
Next Article ரீல்ஸ் மோகத்தால் புல்லாவெளி அருவியில் ஆபத்தை தேடும் இளைஞர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முழு விவரம் இதோ!

தமிழகத்தில் 5 மண்டலங்களில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த மண்டலங்களில் எத்தனை கடைகள் மூடப்படுகின்றன என்ற முழுமையான விவரங்கள் இதோ..!

1 Min Read
தமிழ்நாடு

கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்

கோயில்களின் உபரி நிதி ரூ.20,000 கோடி என்ன ஆனது என்பது குறித்து தவெக அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் கட்டட பணிகளுக்கு செலவிடப்பட்டதாகக்…

1 Min Read
தமிழ்நாடு

வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?