மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதி செவ்வாயின் பார்வை, உச்ச குருவின் மீது விழுவதால் ஒரு வாரத்திற்கு குருமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பொன், பொருள் சேர்க்கையும், அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும்.
மனமும் உடலும் உற்சாகத்துடன் காணப்படும். மனதில் ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது மிகச் சிறந்த காலமாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் உயரும். குடும்பக் குழப்பங்கள் குறையும்.
வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன், வம்பு, வழக்கு போன்றவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவார்கள்.
பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு உண்டு. செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு துவரை தானம் வழங்குவது சிறப்பான பலனைத் தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ. ஆனந்தி செல்: 98652 20406.