MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

Admin
Last updated: ஜூலை 8, 2026 1:45 மணி
Admin
Share
மாணிக்கம் தாகூர் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பேசும் காட்சி
மாணிக்கம் தாகூர் மற்றும் நயினார் நாகேந்திரன்
SHARE

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 'கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம், அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்' என்று தான் கூறியதற்கு நயினார் நாகேந்திரன் கேலியும் கிண்டலுமாக விமர்சித்ததாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழ்நாட்டில் பாஜக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஒரே ஒரு தொகுதியில், சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில், சொந்த செல்வாக்கால் பாஜக சார்பில் போட்டியிட்டவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவர் எப்போது அண்ணாமலை பக்கம் தாவுவார் என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாத பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு, கொஞ்சமும் கூச்சமின்றி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தை நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும், இதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்துக் கொண்டிருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி செய்தாலும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரலை அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தபோது முதல்-மந்திரிகளாக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை போன்றவர்கள், ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மாட்டோம்' என்று முழங்கியதை நயினார் நாகேந்திரன் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு எல்லை வரை வந்து போராட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நதிநீர் விவகாரம் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையிலான எந்தப் பிரச்சினையையும் சுமூகமாக தீர்க்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றும், பிரதமரின் கடமை என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஆனால், அந்த கடமையை செய்யாமல் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பாஜக அரசு நடத்தி வருவதால் தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டக் கூடாது' என்று காவிரி நடுவர் மன்றமும், சுப்ரீம்கோர்ட்டும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. அதன் பிறகும், மேகதாது அணை கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின் படி, பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணாமல், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகத்தை பிரதமர் மோடி அரசு அரங்கேற்றி வருகிறது என்றும் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தான், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது நயினார் நாகேந்திரனுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால், பாஜகவில் இருப்பதால் பொய் பேசும் கலை அவருக்கு இயல்பாகவே வந்து விட்டது என்று நினைக்கிறேன். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள், யார் துரோகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில் பங்கு பெற வைத்திருக்கிறார்கள், பா.ஜ.க.வை ஓடஓட விரட்டி அடித்திருக்கிறார்கள். இதை உணர்ந்து நயினார் நாகேந்திரன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை மாணிக்கம் தாகூர் கண்டித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் காணிக்கையை சங்பரிவார கும்பல் திருடியது நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக தலைவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். எனவே, ஊழல் பற்றி பேசும் போதெல்லாம் பாஜக தலைவர்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது, இல்லையெனில் அசிங்கப்பட்டு போவீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கர்நாடகாகாங்கிரஸ்காவிரிதமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகமாணிக்கம் தாகூர்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் செந்தில் பாலாஜி குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் மனு இன்று விசாரணை
Next Article நடிகர் கயாடு லோஹர் 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பில் உற்சாகமாக உள்ளார் மஞ்சணத்தி மூலம் நீண்டநாள் ஆசை நிறைவேறியது: கயாடு லோஹர் உற்சாகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளி பிரபாஸ் மண்டல் தொடர்பான செய்தி

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்

இந்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, உணவு…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு இன்று சென்னையில் தொடங்குகிறது. இதில் முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் பேச்சுக்கு CPM மாநில செயலாளர் கண்டனம்

சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி முதலமைச்சர் கேலி செய்யும் வகையில் பேசியது தவறு என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் கண்ணியமாக…

1 Min Read
ஐரோப்பாவில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்: 3200 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதில், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மின் தட்டுப்பாடு, உட்கட்டமைப்பு சேதம் என பாதிப்பு…

2 Min Read
தமிழ்நாடு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?