மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருமணத் தடைகள் நீங்கும் காலமாக அமையும். ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இருப்பினும், குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுய ஜாதகத்தில் ராகு, கேது தசை நடப்பவர்கள் உரிய பரிகாரங்கள் செய்த பின்னரே திருமணத்தை நடத்த வேண்டும். சிலருக்கு விருப்பப்பட்டவர்களுடன் திருமணம் நடக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது. தற்போது பார்க்கும் வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் கிரகங்களின் பாதிப்பு ஏற்படாது.

கடன் தொகையை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொது இடங்களில் புகழ் சேரும். குறிப்பாக, 19.6.2026 அன்று காலை 10.07 மணிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால், அன்றைய தினம் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

முக்கியமான பணிகளில் ஆரம்பத்தில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டாலும், இறுதியில் காரிய வெற்றி நிச்சயம். அரசியலில் உள்ளவர்களுக்கு இது சற்று நெருக்கடியான காலமாக இருக்கும். சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை தானம் வழங்குவது நன்மை தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version