MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை: இளைஞர் வீட்டில் தீவிர சோதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை: இளைஞர் வீட்டில் தீவிர சோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை: இளைஞர் வீட்டில் தீவிர சோதனை

தமிழ்நாடு

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை: இளைஞர் வீட்டில் தீவிர சோதனை

Fernandez
Last updated: நவம்பர் 14, 2026 1:31 மணி
Fernandez
Share
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை தொடர்பாக இளைஞர் வீட்டில் காவல்துறையினர் சோதனை
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை தொடர்பாக இளைஞர் வீட்டில் காவல்துறையினர் சோதனை
SHARE

மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு மர்ம நபர் புகுந்து, அங்கிருந்த ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்த துணிகர சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது நள்ளிரவு சுமார் 1 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் பதிவெண் இல்லாத ஸ்கூட்டியில் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததும், முகத்தை மறைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அவர், நகைக்கடையின் பின்புறப் பகுதியை நோட்டமிட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த நாட்டு நாய்கள் அவரைத் துரத்தியதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள், நகைக்கடையின் பின்புறம் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இந்த நகை கொள்ளை வழக்கில் சந்தேகத்தின் பேரில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது.

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகள், சுவர் பகுதிகள், அறைகள் என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டதாரி இளைஞரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதால், அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோதனை நடத்தப்படும் வீடு, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பட்டதாரி இளைஞருக்குச் சொந்தமானது என்றும், இவர் யூடியூபராகவும், பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பு, வாடிக்கையாளர் போல நடித்து மூன்று முறை கடைக்கு வந்து சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையன் யார், நகைகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த விவரங்களை அறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது. தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவம், மதுரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MaduraiNishanth KrishnaPazhangaanathamRobberyTanishq Jewelleryகொள்ளைதனிஷ்க் நகைக்கடைநிஷாந்த் கிருஷ்ணாபழங்காநத்தம்மதுரை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கவுதம் கம்பீர் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்குதல் இந்தியா 89 ரன்களுக்கு சுருண்டது: கம்பீர் அதிருப்தி, வீரர்களுக்கு அறிவுரை
Next Article சென்னையில் தங்கத்தின் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு பலகை தங்கம் விலை சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழ்நாடு

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அர்னாப் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம்…

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை அச்சுறுத்துவதாகவும், அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து மோசமாக நடத்தியதாகவும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் கோட்டையில் தேசிய கொடியேற்றினார்

முதலமைச்சராக பதவியேற்ற பின், முதல்வர் விஜய் முதன்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழா உரையில் ஒற்றுமையையும்…

2 Min Read
ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ தொடர்பாக பஞ்சாப் காவல்துறை கண்டனம் தெரிவித்தது
தமிழ்நாடு

போலி வீடியோ பகிர்வு: ஹர்பஜன் சிங்கிற்கு பஞ்சாப் காவல்துறை கண்டனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், சமூக வலைதளத்தில் போலி வீடியோவைப் பகிர்ந்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?