Lectrix Nduro இ-ஸ்கூட்டர்: 117 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், Lectrix நிறுவனம் தனது Lectrix Nduro இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

Lectrix Nduro இ-ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. Nduro 2.0 வேரியண்டின் விலை ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 360 ஆகவும், Nduro 3.0 வேரியண்டின் விலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.

மைலேஜ் பொறுத்தவரை, Nduro 2.0 வேரியண்டில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். Nduro 3.0 வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இரண்டு வேரியண்ட்களும் அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்த இ-ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்கள், ஐபி 67 மோட்டார் ரேட்டிங், நிரந்தர லித்தியம் அயன் பேட்டரி, சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் ஹைட்ராலிக் டூயல் ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், 3 வருட அல்லது 36 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரிக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், ரிவர்ஸ் மோட் மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version