குமட்டிக் காய் மூலம் வழுக்கை தலையில் முடி வளரச் செய்வது எப்படி?

தற்கால நாகரீக உலகில் தவறான வாழ்க்கை முறையால் பலர் சிறு வயதிலேயே வழுக்கை பிரச்சினையை சந்திக்கின்றனர். இதற்கு மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் குமட்டிக் காயை பயன்படுத்தி வழுக்கை தலையில் முடி வளரச் செய்யலாம். சித்தர்கள் ரகசியமாக பயன்படுத்திய இந்த குமட்டிக் காய், தர்பூசணி பழம் போன்ற தோற்றத்தில், பச்சை நிறத்தில், வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளுடன் சிறிய உருண்டை வடிவில் அழகாக இருக்கும்.

இந்த குமட்டிக் காய் பூச்சி விரட்டியாகவும், உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் சக்தியும் கொண்டது. கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட்டால், இந்த காயை அரைத்து தடவினால் விரைவில் குணமாகும். தலைமுடி உதிர்வு அல்லது வழுக்கை ஏற்பட்டால், குமட்டிக் காயை அரைத்து வழுக்கை விழுந்த இடங்களில் தேய்த்து வந்தால் முடி வளரும். வாரத்திற்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

மேலும், பொடுகு தொல்லையை போக்கவும் குமட்டிக் காயை பயன்படுத்தலாம். குமட்டிக் காயை அரைத்து தலையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் சூடுப்படுத்தி, அதில் அரைத்த குமட்டிக் காயை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இந்த குமட்டிக் காய் கலந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால், வழுக்கை தலையில் அடர்த்தியான முடி வளரும் என்று நம்பப்படுகிறது. இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த முறை உதவும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version