MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: கிருஷ்ணகிரியில் பயங்கரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: கிருஷ்ணகிரியில் பயங்கரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: கிருஷ்ணகிரியில் பயங்கரம்

தமிழ்நாடு

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: கிருஷ்ணகிரியில் பயங்கரம்

Fernandez
Last updated: ஜூலை 18, 2026 5:31 மணி
Fernandez
Share
கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
கிருஷ்ணகிரியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
SHARE

கிருஷ்ணகிரியில், தன்னை விட வயது குறைந்த வாலிபருடன் வாழ திட்டமிட்ட மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் உடந்தையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (35), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் போயனபள்ளியைச் சேர்ந்த ஹாசினி (30) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளார். ரமேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஓசூரில் வசித்து வந்து, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹாசினி தனது கணவர் ரமேஷ் மற்றும் மகள் மவுனிகாவுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள், மல்லப்பாமலைக்கு கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஹாசினி தனது கணவரிடம் கேட்டுள்ளார். அதன்படி, ரமேஷ் தனது மனைவியையும், குழந்தையையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு புறப்பட்டார்.

ஆனால், வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா பதற்றமடைந்து, குப்பம் அடுத்த ரால்லபூடுகூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் மல்லப்பாமலை பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஹாசினியையும், குழந்தையையும் காணவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஹாசினி தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஹாசினி போயனபள்ளியைச் சேர்ந்த யுகேந்தர் என்ற வாலிபருடன் பழங்கி வந்துள்ளார். தன்னை விட வயது குறைந்த யுகேந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ரமேஷ், ஹாசினியிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ரமேஷை கொலை செய்ய ஹாசினி, யுகேந்தருடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கணவரிடம் மல்லப்பாமலைக்கு செல்வதாக கூறி, குழந்தையை தூக்கிக்கொண்டு அவருடன் சென்றுள்ளார். மல்லப்பாமலை பாதையில் செல்லும்போது, 3-வது வளைவில் ஹாசினி தனது கைப்பையை கீழே போடுவது போல் நடித்துள்ளார். உடனே ரமேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கைப்பையை எடுக்க சென்றபோது, மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து, உடலை புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், யுகேந்தர், ஹாசினி மற்றும் குழந்தை மவுனிகாவுடன் ரமேஷின் மோட்டார் சைக்கிளில் குப்பம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, யுகேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ரயிலில் ஏறி தப்பி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட யுகேந்தர், ஹாசினி, குழந்தை மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HasiniKrishnagiriMurderRameshTamil NaduYukenthirகள்ளக்காதல்கிருஷ்ணகிரிகொலைதமிழ்நாடுயுகேந்தர்ரமேஷ்ஹாசினி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி சோனம் வாங்சுக் கைது: ஜனநாயகத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்
Next Article அரிசி வண்டுகளை விரட்டும் இயற்கை முறை குறிப்பு வீட்டை விட்டு அரிசி வண்டுகளை விரட்டும் எளிய வழி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

மேகதாது அணை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர…

ஜூலை 18, 2026

பிரதமர் பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் கைது: ஜனநாயகத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

ஜூலை 18, 2026

விக்ரம்-1 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான…

ஜூலை 18, 2026

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் வரும் 22-ல் முக்கிய கூட்டம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய கூட்டம்…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

1 Min Read
சென்னை முகப்பேர் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த வீடு
தமிழ்நாடு

சென்னை: நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு – பூசாரி கைது

சென்னை முகப்பேர் பகுதியில் நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி திருட்டு. இது தொடர்பாக பூசாரி கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரூ.10 லட்சம் பரிசு: பொறியியல் மாணவர்களுக்கு ஜி.டி. நாயுடு இனோவேஷன் போட்டி

பொறியியல் மாணவர்களுக்கான ஜி.டி. நாயுடு இனோவேஷன் போட்டி (GDN Challenge) தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, இன்குபேஷன் பயிற்சி உண்டு. ஜூலை 3ல் சென்னை இறுதிப்போட்டி.…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் 300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் பெரம்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?