கோவை குற்றாலம் அருவி தற்காலிக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட வனத்துறை இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவிக்கு வருவதை தற்காலிகமாக தடை செய்துள்ளது. அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது.

கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலை நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை குறைந்து, அருவியில் நீர்வரத்து சீரடைந்த பின்னரே அருவி மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version