கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்

கோவை மத்திய சிறை வளாகம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி ராகவன், காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ராகவன், கர்நாடக வழக்கு விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சாக்கவுண்டனூர் பகுதியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

இதனையடுத்து, கர்நாடக மாநில போலீசார் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராகவன் பவானிசாகர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அன்னூர் போலீசார் இரு தினங்களுக்கு முன்னர் அங்கு சென்று அவரை விரட்டிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகவன், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் கேட்டை கடந்தவுடன், கைவிலங்கை அகற்றும் சமயத்தில் காவலர்களை ஏமாற்றிவிட்டு ராகவன் மீண்டும் தப்பி ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற காவலர்களால் பிடிக்க முடியவில்லை. சிறை வளாகத்திற்குள் கைதி தப்பி ஓடிய சம்பவம், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைதி தப்பிச் செல்ல அனுமதித்ததாகக் கூறி நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராகவனைப் பிடிக்க தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர் வசித்து வந்த பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராகவனை சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்தனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவைக்கு அழைத்து வருகின்றனர். பல வழக்குகளில் தொடர்புடைய ராகவன், காவல்துறையினரை ஏமாற்றி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version