சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை எப்போது குடிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
இளநீர், பொதுவாக அனைவராலும் விரும்பி அருந்தப்படும் ஒரு இயற்கையான பானமாகும். இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த பானமாக கருதப்படுகிறது. ஏனெனில், இளநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இருப்பினும், உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே இளநீரை அருந்த வேண்டும்.
இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் இளநீர் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, இரவில் ஒரு டம்ளர் இளநீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நீர்ச்சத்தை சீராக வைத்து, உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, இரவில் இளநீர் அருந்துவதன் மூலம், அதில் உள்ள சத்துக்கள் இரவு முழுவதும் உடலில் செயல்பட்டு, சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இளநீர் அருந்துவதும் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும்.
மேலும், இளநீர் அருந்துவது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இளநீரை சரியான நேரத்தில் அருந்தி, அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவோம்.
