MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரள கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 35 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரள கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 35 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கேரள கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 35 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விளையாட்டு

கேரள கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 35 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Admin
Last updated: ஜூன் 26, 2026 2:08 மணி
Admin
Share
SHARE

திருவனந்தபுரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், கிரிக்கெட் பயிற்சி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கேரள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் பயிற்சியாளர் மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மனு மீது மொத்தம் 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஞ்சு மீரா பிர்லா முன்னிலையில் நடைபெற்றது. குற்றவாளி மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 66,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு இந்த அகாடமியில் சேர்ந்த மாணவிக்கு, சிறப்பு உடற்தகுதி பயிற்சி அளிப்பதாகக் கூறி, ஜிம் மற்றும் குளியலறைக்கு அழைத்துச் சென்று மனு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, இதுபற்றி வெளியே கூறினால் கிரிக்கெட் எதிர்காலத்தை அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி 2019 இல் அகாடமியை விட்டு வெளியேறினார்.

பல ஆண்டுகள் கழித்து, பெண்கள் கிரிக்கெட் போட்டியின் போது மனுவை கண்ட ஒரு மாணவி பயத்தில் கதறி அழுதார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனுவின் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. மேலும் 5 மாணவிகள் புகார் அளித்தனர். முதல் வழக்கின் தண்டனை முடிந்த பிறகே இந்த 2வது வழக்கிற்கான 35 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் மனு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க நேரிடும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Keralaகிரிக்கெட்கேரளாசிறை தண்டனைபாலியல் வன்கொடுமைபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போதைப்பொருட்களை ஒழித்து வலிமையான சமுதாயம்: முதல்வர் விஜய்
Next Article சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் காட்சி

மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், பெதநின்ற கொலனு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,…

ஆகஸ்ட் 11, 2026

காவிரி நீர் திறப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கு 13-ல் விசாரணை

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும்,…

ஆகஸ்ட் 11, 2026

யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – நிர்மலா சீதாராமன்

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும்…

ஆகஸ்ட் 11, 2026

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்: ஆகஸ்ட் நீர் திறப்பு விவாதம்

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு: சீனியர் வீரர் சஞ்சு சாம்சன் காரணம் – உதவி பயிற்சியாளர் விளக்கம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு சீனியர் வீரர் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்ததே காரணம் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்
விளையாட்டு

கம்பீர் வியூகத்தால் தினேஷ் கார்த்திக் கடும் அதிருப்தி: லைவ் மேட்ச்சில் வாக்குவாதம்!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வியூகம் குறித்து தினேஷ் கார்த்திக் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

அபிஷேக் சர்மா: 16 ரன்கள் எடுத்தால் விராட் கோலி சாதனையை முறியடிப்பார்!

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனைப் பட்டியலில் இணைவார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?