MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி: வீ.டி. சதீசன் புதிய முதல்-மந்திரி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி: வீ.டி. சதீசன் புதிய முதல்-மந்திரி!
இந்தியா

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி: வீ.டி. சதீசன் புதிய முதல்-மந்திரி!

Admin
Last updated: May 14, 2026 12:41 pm
Admin
Share
SHARE

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று, 102 இடங்களை கைப்பற்றி ஆட்சியை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முதல்-மந்திரி யார் என்பதைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொண்டர்களிடையே அதிருப்தியை வளர்த்தது.

முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மாநிலம் முழுவதும் தொண்டர்கள் தங்களுக்கு விருப்பமான தலைவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தினர்.

இந்த இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர, காங்கிரஸ் மேலிடக் குழுவினர் திருவனந்தபுரத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினர். தொடர்ந்து, வேணுகோபால் உள்ளிட்ட மூவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், மூவருமே முதல்-மந்திரி பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்களிடம் கருத்து கேட்க கட்சி மேலிடம் அவர்களை டெல்லிக்கு அழைத்தது. சுதாகரன், முரளிதரன், சுதீ ரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர். மேலும், மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டோனியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது, பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வீ.டி. சதீசன், கேரளாவின் புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CongressKerala Politicsகேரளாசட்டசபை தேர்தல்வீ.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: முதலிடம் ஆர்சிபி, ஆனாலும் வெளியேறும் ஆபத்து!
Next Article சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கே.சி. வேணுகோபாலை…

May 14, 2026

டெல்லியில் அதிர்ச்சி: பேருந்தில் பெண்ணுக்கு கொடூர பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் பேருந்தில் வைத்து மூன்று குழந்தைகளின் தாயான…

May 14, 2026

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை…

May 14, 2026

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு…

May 14, 2026

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி: வீ.டி. சதீசன் புதிய முதல்-மந்திரி!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி…

May 14, 2026

You Might Also Like

இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22…

2 Min Read
இந்தியா

சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

1 Min Read
இந்தியா

அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களை குறைக்கும் இந்தியா!

தனியார் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாக, அணு உலைகளை விரிவுபடுத்துவதற்காக கணிசமான அளவு நிலத்தை விடுவிக்கும் பொருட்டு, அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களின் அளவைக் குறைக்க…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: தவிப்பில் மாணவர்கள்; தீர்வு என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?