கர்ப்பம் கலைப்பு புகார்: பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பதவி நீக்கம்

பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பு முருகானந்தம்

திருச்சியைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளரான திவ்யா சேஷாத்ரி, தன்னை பல ஆண்டுகளாகத் தொடர்பில் வைத்துக்கொண்டு, குழந்தை பெற்ற பின்னரும் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், குழந்தைகளின் பள்ளிப் பதிவேடுகளில் அவரே பாதுகாவலராக கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி கருப்பு முருகானந்தம் உறுதியளித்ததாகவும் திவ்யா சேஷாத்ரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர்பின் காரணமாக தான் கர்ப்பமடைந்ததாகவும், ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக கருவைக் கலைக்க அவர் கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா சேஷாத்திரி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து மின்னணு ஆதாரங்கள் (ஆடியோ, வீடியோ) மற்றும் சாட்சிகளின் விவரங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு இந்தப் புகாரை அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காலவரையறைக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை கருப்பு முருகானந்தத்தைப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் திவ்யா சேஷாத்ரி வலியுறுத்தியுள்ளார். அவரது புகாரை அடுத்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் விளைவாக, பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கருப்பு முருகானந்தம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல தகவல்கள் விசாரணைக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version