MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கார்த்திகை தீபம்: வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவதன் ரகசியம் என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கார்த்திகை தீபம்: வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவதன் ரகசியம் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கார்த்திகை தீபம்: வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவதன் ரகசியம் என்ன?

தமிழ்நாடு

கார்த்திகை தீபம்: வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவதன் ரகசியம் என்ன?

Fernandez
Last updated: நவம்பர் 24, 2026 1:30 மணி
Fernandez
Share
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றப்படும் அகல் விளக்குகள்
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றப்படும் அகல் விளக்குகள்
SHARE

கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டில் 27 அகல் விளக்குகள் ஏற்றுவது, 27 நட்சத்திரங்களின் அருளைப் பெறுவதற்கும், இல்லத்தில் மங்களமும் செல்வ வளமும் பெருகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு விளக்கும் ஒரு நட்சத்திரத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி, ஐஸ்வர்யம் மற்றும் அமைதி உண்டாகும் என்பது பாரம்பரிய நம்பிக்கை.

கார்த்திகை நட்சத்திரத்துடன் முழுமதி சேரும் காலம் எங்கும் பனியும் குளிருமாக இருக்கும். இந்த முழுமதியும் கார்த்திகையும் இணையும் மாதமே கார்த்திகை மாதம் ஆகும். இத்தகைய குளிர் மிகுந்த கார்த்திகையின் முழுமதி நாளில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகக் காட்சியளிக்கிறார். அவர், அக்னி மண்டலத்தின் நடுவில் உமையொரு பாகனாக திருநடனம் புரிகிறார். அதுவே கார்த்திகை தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநாளில் ஆலயங்கள்தோறும், வீடுகள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். விண்ணில் விளங்கும் நட்சத்திரக் கூட்டங்களை மண்ணில் ஒளிர்வதாகக் காட்டுவதே திருக்கார்த்திகை தீபத்திருநாள். அதையொட்டியே, அன்று எண்ணற்ற தீப விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்யப்படும். அவற்றுள் தூப- தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம் பிரம்மனுக்கும், புருஷாமிருகம் கலைமகளுக்கும், நாகதீபம் நாகராஜருக்கும், கஜ தீபம் விநாயகருக்கும், வியாக்ர தீபம் பராசக்திக்கும், ஹம்ச தீபம் பிரம்மாவுக்கும், வாஜ்ய தீபம் சூரியனுக்கும், சிம்ம தீபம் துர்கைக்கும், சூல தீபம் மும்மூர்த்திகளுக்கும், துவஜ தீபம் வாயுவுக்கும், வ்ருஷப தீபம் ரிஷபதேவருக்கும், பிரமா தீபம் துர்காதேவிக்கும், குக்குட தீபம் கந்தப்பெருமானுக்கும், கூர்ம தீபம் மகாவிஷ்ணுவுக்கும், ஸ்ருக் தீபம் அக்னிக்கும், சக்தி தீபம் பராசக்திக்கும் உரியவை.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போதும், அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுதலுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசித்தால், 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும். அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.

திருக்கார்த்திகை தினத்தில் வீடெங்கிலும் அகல்விளக்குகள் ஏற்றி வைப்பதால், தீபலட்சுமி மகிழ்ந்து அருள்புரிவாள். ஞானநூல்கள் குறைந்தது 27 தீபங்கள் ஏற்றிவைப்பது உத்தமம் என்கின்றன. கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள், திண்ணைகளில் நான்கு விளக்குகள், மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள், நிலைப்படியில் இரண்டு விளக்குகள், நடைகளில் இரண்டு விளக்குகள், முற்றத்தில் நான்கு விளக்குகள் என ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்க வேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும். சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றுவதால் அன்ன தோஷம் ஏற்படாது. தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும். பின்கட்டு பகுதியில் நான்கு விளக்குகளை ஏற்றிவைத்தால் விஷ ஜந்துக்கள் அணுகாது.

அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாதவர்கள், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம். கார்த்திகை தினத்தில், தீபத்தை ஏற்றி வைத்து, ‘தீப சரஸ்வதி போற்றி, தீப லட்சுமி போற்றி, தீப துர்கா போற்றி’ என்று ஒவ்வொரு நாமத்தையும் மூன்று முறை சொல்லி வழிபடவேண்டும். அத்துடன், குலதெய்வத்தின் திருநாமத்தையும் மூன்று முறை சொல்லி, தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்து வணங்குவதால், வீட்டில் எல்லா சுபிட்சங்களும் நிறையும்.

இந்த நாளில், வீடுகள்தோறும் நெல்பொரியுடன் வெல்லப்பாகும் தேங்காய்த் துருவலும் சேர்த்து, பொரி உருண்டை பிடித்து, ஸ்வாமி மற்றும் தீபத்துக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். வெள்ளை நிறப் பொரி- விபூதி அணிந்த சிவனாரையும், தேங்காய்த் துருவல்- கொடைத் தன்மையுடன் வாழ்ந்த மகாபலிச் சக்கரவர்த்தியையும், வெல்லம்- பக்தர்களின் அளப்பரிய பக்தியையும் குறிப்பதாகச் சொல்கின்றன புராணங்கள். அதாவது, அன்பர்களின் ஆத்மார்த்தமான பக்தியில் மகிழ்ந்து, நெற்பொரியின் உள்ளேயும் தோன்றுவார் சிவபெருமான் என்பது ஐதீகம்!

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:27 lamps27 விளக்குகள்Karthigai DeepamSpiritualitystarswealthஆன்மீகம்கார்த்திகை தீபம்செல்வம்நட்சத்திரங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்த அறிவிப்பு தனுஷின் ‘ஓம்’ திரைப்படம்: 3 நாட்களில் ரூ.101.7 கோடி வசூல்!
Next Article தூக்கப் போட்டியில் பங்கேற்கும் பெண் தூக்கத்திற்கு ரூ.9.6 லட்சம்: மும்பை பெண்ணின் அசத்தல் சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்கள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் மீண்டும் கூட்டணி

சுமார் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி…

நவம்பர் 25, 2026

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விசுவாச நாய்

மத்திய பிரதேசத்தில், தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில்…

நவம்பர் 25, 2026

விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு வழக்கு: இலங்கை நபருக்கு ஜாமீன்

கேரளாவில் 2021ல் இலங்கை படகில் இருந்து 300…

நவம்பர் 25, 2026

ராஜீவ் காந்தி பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு

சோனியா காந்தி எழுதிய சுயசரிதை வெளியீட்டு விழாவில்,…

நவம்பர் 25, 2026

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும்…

நவம்பர் 24, 2026

You Might Also Like

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். வாகனங்கள் வாங்குவதில் அரசு காட்டும் வேகத்தை விவசாய…

1 Min Read
முதலமைச்சர் ஜோசப் விஜய் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

காமராஜர் காலை உணவு திட்டம்: முதல்வர் விஜய் நாளை விரிவாக்கம் செய்கிறார்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

2 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: காவிரி டெல்டா வறண்டுவிடும் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி வறண்டு பாலைவனமாக மாறிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

1 Min Read

பாங்காக் பார் தீ விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பாங்காக்கில் உள்ள மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?