MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

இந்தியா

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 8:40 மணி
Fernandez
Share
கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிவிப்பு
கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
SHARE

கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவகால காய்ச்சல்களும் அதிகரித்து வருகின்றன. இதில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையின் தகவல்களின்படி, கடந்த 8 மாதங்களில் மட்டும் கர்நாடகாவில் மொத்தம் 4,125 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தலைநகர் பெங்களூருவில் பதிவாகியுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 2,033 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெங்களூரு நகரில் 982 பேர், மைசூருவில் 184 பேர், உடுப்பியில் 293 பேர், தட்சிண கன்னடாவில் 87 பேர், பல்லாரியில் 51 பேர், பெலகாவியில் 45 பேர், மண்டியாவில் 31 பேர், பெங்களூரு புறநகரில் 26 பேர், ஹாவேரி, பெங்களூரு தெற்கு ஆகிய பகுதிகளில் தலா 26 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், சிவமொக்காவில் 91 பேர், உத்தரகன்னடாவில் 41 பேர், தாவணகெரேயில் 23 பேர் என பல்வேறு மாவட்டங்களிலும் பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சோப்பு அல்லது சானிடைசர்களை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெந்நீர் அருந்துவது நல்லது. கண்கள், மூக்கு போன்றவற்றை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு இல்லாதவர்களும் கூட, தேவையற்ற கை குலுக்கல்களை தவிர்ப்பது நல்லது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். அனைவரும் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BengaluruHealth DepartmentKarnatakaSwine Fluகர்நாடகாசுகாதாரத்துறைபன்றி காய்ச்சல்பெங்களூருமுககவசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் பேசுகிறார் மாட்டு சிறுநீர் பாடத்திட்டம்: மத்திய அரசு முயற்சி – எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
Next Article இஷான் கிஷன் துலீப் டிராபி போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்கிறார் துலீப் டிராபி: இஷான் கிஷனின் மின்னல் ஸ்டம்பிங் – வைரலாகும் வீடியோ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

பாமக சௌமியா அன்புமணி காவிரி நீர் விவகாரம் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

கேரள மழைதான் காரணம்: காவிரி நீர் திறப்பு குறித்து சௌமியா அன்புமணி விமர்சனம்

கேரளாவில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பி உபரிநீர் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டது என்றும், கர்நாடகா அரசு தீர்ப்புகளை மதிக்கவில்லை என்றும் பாமக சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

2 Min Read
இந்தியா

கேரள முதல்வர் பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு!

கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாயை மீட்கச் சென்றபோது இந்த அதிசய நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.

1 Min Read
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கோயல் மல்லிக்
இந்தியா

திரிணமூல் எம்.பி. கோயல் மல்லிக் ராஜினாமா: மம்தாவுக்கு பின்னடைவு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மற்றொரு பின்னடைவாக, அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கோயல் மல்லிக் நேற்று தனது பதவியை ராஜினாமா…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?