MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்கள் கேள்வி: வாக்குறுதி நிறைவேற்றாததால் உண்ணாவிரதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்கள் கேள்வி: வாக்குறுதி நிறைவேற்றாததால் உண்ணாவிரதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மக்கள் கேள்வி: வாக்குறுதி நிறைவேற்றாததால் உண்ணாவிரதம்!

தமிழ்நாடு

மக்கள் கேள்வி: வாக்குறுதி நிறைவேற்றாததால் உண்ணாவிரதம்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 17, 2026 2:54 மணி
Fernandez
Share
கணியூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கணியூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
SHARE

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான கூடுதல் குடிநீர் வசதி, உடைந்த குடிநீர் குழாய்களை மாற்றுதல், கிராம சாலைகள் சேதமடைந்ததை சீரமைத்தல், குடியிருக்கும் நிலத்தின் பட்டாவை வகை மாற்றம் செய்து ஆவணப் பதிவில் உள்ள தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

தகவல் அறிந்ததும், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, போராட்டத்திற்கு தலைமை வகித்த முன்னாள் ஊராட்சித் தலைவர் வேலுசாமி கூறுகையில், 'மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உடனடியாக முடிவெடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatoreஉண்ணாவிரதம்கணியூர்குடிநீர்சாலை வசதிசூலூர்நிலப் பட்டைமக்கள் போராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காஞ்சிபுரம் அருகே விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரி காஞ்சிபுரம் அருகே பயங்கர விபத்து: 25 தொழிலாளர்கள் படுகாயம்
Next Article ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகம் பெல் நிறுவனத்தில் 305 ஐ.டி.ஐ வேலைவாய்ப்புகள்: நேர்முகத் தேர்வு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாரதிய ஜனதா கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

பாஜக தேசிய நிர்வாகிகள்: 65-ல் 12 பெண்கள் நியமனம்

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: 65 பேரில் 12 பெண்கள் நியமனம்.…

ஆகஸ்ட் 17, 2026

மேற்குவங்க ஓட்டல் தீ விபத்து: 6 பக்தர்கள் உயிரிழப்பு

மேற்குவங்காளத்தின் தரபதி கோவில் அருகே ஓட்டலில் பயங்கர…

ஆகஸ்ட் 17, 2026

பிஹார் கோயில் விபத்து: 7 பக்தர்கள் பலி, 10 பேர் காயம்

பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக்…

ஆகஸ்ட் 17, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு…

ஆகஸ்ட் 17, 2026

இந்தியா-தாய்லாந்து ராணுவ பயிற்சி: சூரத் தனியில் நாளை தொடக்கம்

இந்தியா-தாய்லாந்து இடையே 15வது கூட்டு ராணுவப் பயிற்சி…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

வாடகை வீட்டில் வசிக்கிறேன்; 2 கோடி ரூபாய் இல்லை – அமைச்சர் ரமேஷ்

பழனி நில விவகாரத்தில் தீவிர விசாரணை நடக்கிறது. என் குடும்பத்தினரிடம் 2 கோடி ரூபாய் இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஸ்ரீரங்கம் கோயில் கோபுர பணிக்காகவே காலணி…

2 Min Read
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை
தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி சர்ச்சை: அண்ணாமலை எழுப்பும் முக்கிய கேள்விகள்!

மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர் நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். தவறுக்கு…

2 Min Read
இடது பக்கமாக உறங்கும் நபர்
தமிழ்நாடு

இடது பக்கம் தூங்குவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

இடது பக்கம் சாய்ந்து உறங்குவது செரிமானம், இதய ஆரோக்கியம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குறட்டையைக் குறைத்தல் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. தரமான தூக்கத்திற்கு இது ஒரு…

2 Min Read
கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதி
தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது

சென்னையில் வசித்து வந்த இலங்கை தம்பதி, தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டனர். விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட வாக்காளர் அட்டை மூலம் இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?