குழந்தைகள் மீதான கொடூர சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்!

திமுக எம்.பி. கனிமொழி

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

1990களில் இருந்தே இத்தகைய குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்ற கொடுஞ்செயல்களில் அவர்கள் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதி மட்டுமல்ல. இனி எந்த குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்வது நமது அனைவரின் கடமையாகும். குழந்தைகள் நலனைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

மேலும், தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, அத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சமூகத்தில் ஒரு வலுவான செய்தி செல்லும் என நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version