கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் திருமண செலவுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கலையரசி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார் பிரேமா. இந்த கடன் தொகைக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வட்டி கேட்டு கலையரசி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி, கலையரசி பிரேமாவை அவதூறாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேமாவின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version