கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்

கதர் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர், விசில் அரசின் அமைச்சரவையில் தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், பெண் பிரதிநிதி ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவியதே இதற்குக் காரணம்.

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மீனவப் பெண் என்பதால், அவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், சீனியர் கோட்டாவில், கிள்ளியூரைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, கிள்ளியூரைச் சேர்ந்தவருக்கு இருக்கும் சட்டமன்ற கதர் கட்சித் தலைவர் பதவியை இந்தப் பெண் எம்எல்ஏ-வுக்குக் கொடுத்து அவரைச் சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், அறிவாலயம் நோக்கி சிறுத்தை பிரபலங்கள் செல்வது குறித்தும் சில தகவல்கள் உலா வருகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version