MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஜோஸ் பட்லர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஜோஸ் பட்லர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 6, 2026 9:24 காலை
Sri Prem Kumar R
Share
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்
SHARE

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார். இப்போட்டிக்கு முன்பு பொல்லார்டின் சாதனையை முறியடிக்க பட்லருக்கு 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பட்லர், அதிரடியாக விளையாடி வெறும் 20 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், தன் அணியை 69 பந்துகளிலேயே வெற்றி பெறச் செய்தார்.

இதன் மூலம், தனது 522வது டி20 போட்டியில் விளையாடிய பட்லர், ஒட்டுமொத்தமாக 14,833 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்த ரன்களில் 9 சதங்களும், 106 அரைசதங்களும் அடங்கும்.

இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட், 746 போட்டிகளில் 14,803 ரன்களுடன் தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்கள் எடுத்து 3வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,449 ரன்களுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 14,284 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 430 போட்டிகளில் 14,218 ரன்களுடன் 6வது இடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் 7வது இடத்திலும், பாகிஸ்தானின் சோயப் மாலிக் 8வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 9வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 472 போட்டிகளில் 12,531 ரன்களுடன் 10வது இடத்தில் உள்ளார்.

ஜோஸ் பட்லரின் இந்த அபார சாதனை உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தி ஹண்ட்ரட் 2026 தொடரில் அவர் 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 277 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். இந்த சாதனை கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketJos ButtlerT20 CricketWorld Recordஉலக சாதனைகிரிக்கெட்டி20 கிரிக்கெட்ஜோஸ் பட்லர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மத்திய அரசு சோலார் பேனல் திட்டம் 50 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள்: மத்திய அரசு அறிவிப்பு
Next Article சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விளையாட்டு

CSK தோல்விக்கு ருதுராஜ் காரணமா? பத்ரிநாத் கடும் விமர்சனம்!

சிஎஸ்கே அணி லக்னோவிடம் தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த ஒரு முடிவு தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு இரட்டை அடி: பிசிசிஐ அதிரடி அபராதம்!

ஐபிஎல் 2026 தொடரிலிருந்து வெளியேறிய சிஎஸ்கே அணிக்கு, பிசிசிஐ அதிரடியாக அபராதம் விதித்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
விளையாட்டு

கவுண்டி கிரிக்கெட்டில் அசத்திய இந்திய பவுலர்கள்: உனத்கட் 4 விக்கெட், மானவ் சுதர் 2 விக்கெட்

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் 4 விக்கெட்டுகளையும், இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் வரலாற்றில் 19-வது முறையாக டக்-அவுட் ஆகி, ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?