வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல 3 மாத தடை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல 3 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் கல் ஜல்லி உள்ளிட்ட துணைப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் பிர A.B.C. D. பிரபு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன் விளைவாக, தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் இந்த தடையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாப்பதும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் இந்த தற்காலிக தடை உத்தரவின் முக்கிய நோக்கங்களாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version