முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

வணக்கம். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சரியான நேரத்தில் விஜய் அவர்களுக்கு தோளோடு தோள் நின்று, ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version