IPL 2026: ஓரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீர ஜெமி ஓவர்டன்.. தடுமாறிய லக்னோ அணி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில், சிஎஸ்கேயின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அபாரமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், ஓவர்டன் அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியை தள்ளாடச் செய்தார்.

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். பவர் ப்ளேயின்போது ஜாஷ் இங்லிஸ் அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் அரைசதம் கடந்து, லக்னோ அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இதனால் நான்காவது ஓவரிலேயே லக்னோ 50 ரன்களைக் கடந்தது.

இருப்பினும், இங்லிஸின் இந்த அதிரடியை ஜேமி ஓவர்டன் முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆட்டத்தின் 10வது ஓவரில், சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிக்க இங்லிஸை 85 ரன்களில் (33 பந்துகள்) வெளியேற்றினார். அதே ஓவரில், ரிஷப் பந்த்தையும் 15 ரன்களில் கிளீன் போல்டாக்கி, லக்னோ அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்தார். இந்த இரட்டை விக்கெட்டுகள் சிஎஸ்கேவை ஆட்டத்தில் மீண்டும் முன்னுக்குக் கொண்டுவந்தது.

ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஜெமி ஓவர்டன் கொண்டாடினார். இதற்கிடையில், அன்ஷுல் காம்போஜ், மார்ஷை 10 ரன்களில் வீழ்த்த, தீவேல்ட் ப்ரெவிஸ் கேட்ச் பிடித்தார். பவர் ப்ளே முடிந்த முதல் ஓவரிலேயே, நூர் அகமது வீசிய பந்தில் நிக்கோலஸ் பூரன் 3 பந்துகளில் 1 ரன் எடுத்து சர்பராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது லக்னோவின் ஸ்கோரை மேலும் கட்டுப்படுத்த உதவியது.

இதனால் 112 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் லக்னோ அணி ,இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், தற்போது லக்னோ அணி 115 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை கண்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version