ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடம்

ஜப்பானின் குமாமோட்டோ நகரை இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உலுக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால், மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 1 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நாட்டின் க்யூஷா தீவில் உள்ள குமாமடோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அப்பகுதி மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version