MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆக.1 முதல் போட்டிகள் தொடக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆக.1 முதல் போட்டிகள் தொடக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆக.1 முதல் போட்டிகள் தொடக்கம்!

தமிழ்நாடு

ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆக.1 முதல் போட்டிகள் தொடக்கம்!

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 7:00 காலை
Fernandez
Share
ஈஷா கிராமோத்சவம் 2026 விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் குறித்த அறிவிப்பு
ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் போட்டிகள் தொடக்கம்.
SHARE

சத்குருவின் ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள்', இந்த ஆண்டு தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகின்றன. இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது. கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலைவாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்தச் சூழலை மாற்றி, கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டித் தொடர் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில், சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தின் 3-ஆவது மற்றும் 4-ஆவது வார இறுதி நாட்களில் நடத்தப்படும். இந்த தொடர் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் என பல நிலைகளில் நடைபெறும்.

பிரம்மாண்டமான இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும். ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு கைப்பந்து (வாலிபால்) போட்டிகளும், பெண்களுக்கு எறிபந்து (த்ரோபால்) போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஆனால், தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது.

இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ₹5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ₹3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ₹1 லட்சமும், ₹50,000-மும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ₹1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

கடந்தாண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற வந்த ஈஷா கிராமோத்சவம், இந்தாண்டு வட மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களோடு இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து ஈஷா கிராமோத்சவ ஒருங்கிணைப்பாளர் சுவாமி புலகா கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் ஈஷா கிராமோத்சவம் அளவிலும் தாக்கத்திலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து கொண்டாடும் வாய்ப்பை கிராமோத்சவம் வழங்குகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு கிராம அணியையும் இதில் பங்கேற்று விளையாட்டின் மகிழ்ச்சி, தோழமை மற்றும் மாற்றும் சக்தியை அனுபவிக்க அழைக்கிறோம்' எனத் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில், சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2.60 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 'தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் சுவையான கிராமப்புற உணவுக் கடைகள் எனப் பலவற்றையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து நடத்துவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் செழுமையான கலாச்சாரத்தை ஈஷா கிராமோத்சவம் கொண்டாடுகிறது. வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளைக் கண்டு ரசிக்கலாம். அதோடு கோ-கோ, கிட்டிப்புள், கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம். வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும் என சத்குரு கூறியுள்ளார். கிராமப்புற முன்னேற்றம் மற்றும் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட முன்னணி நிறுவனங்கள், இந்த ஈஷா கிராமோத்சவம் 2026-க்கு தங்களது ஆதரவை வழங்குகின்றன. இதில் கிராஸ்ரூட் பார்ட்னராக பிரைம் வாலிபால் ‘சென்னை பிளிட்ஸ்’ அணி, மொபிலிட்டி பார்ட்னராக ‘கிராவ்டன் மோட்டார்ஸ்’, ஸ்போர்ட்ஸ் & எக்விப்மென்ட் பார்ட்னராக ‘நிவியா ஸ்போர்ட்ஸ்’, ஆதரவு பார்ட்னராக ‘டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ்’, ஆன்-கிரவுண்ட் சப்போர்ட் பார்ட்னராக ‘வொண்டர் சிமெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. சிஎஸ்ஆர் பார்ட்னர்களாக ‘சிஜி பவர்’, ‘வரீந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’, ‘ராயல் இன்ஃப்ரா கான்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘அகிலிசியம் கன்சல்டிங்’ ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.

ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் ishagramotsavam.sadhguru.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 83000 30999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Isha GramotsavamRural SportsSadhguruSports CompetitionTamil Naduஈஷா கிராமோத்சவம்கிராமப்புற விளையாட்டுசத்குருதமிழ்நாடுவிளையாட்டு போட்டிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் தேர்வுச் சீர்திருத்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். ஜே.இ.இ தோல்வி முதல் கோமியம் சர்ச்சை வரை: ஐ.ஐ.டி இயக்குநர் தேர்வு சீர்திருத்தக் குழுவில்
Next Article நடிகர் விஜய் மற்றும் நடிகர் தனுஷ் அரசியல் களத்தில் போட்டியிடுவது குறித்த ஜோதிடரின் கணிப்பு 2031 தேர்தலில் விஜய் Vs தனுஷ்: ஜோதிடர் கணிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை…

ஜூலை 30, 2026

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு…

ஜூலை 30, 2026

பாபர் மசூதி இடிப்பு தவறு: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கூறியது…

ஜூலை 30, 2026

மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர கணவன் கைது: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, துடித்த காட்சியை…

ஜூலை 30, 2026

3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹார், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசிய திரைப்பட விருதுகள் குறித்து வாழ்த்து தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

10 தேசிய விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

10 தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'ராயன்', 'கேப்டன் மில்லர்', 'அமரன்' உள்ளிட்ட படங்களுக்கு…

2 Min Read
தமிழ்நாடு

சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள் முறைகேடாக எந்த பொருளும் வர அனுமதிக்கப்படாது என்றும், போதைப்பொருள் புழக்கத்தை…

1 Min Read
தமிழ்நாடு

மதுரை அருகே சோகம்: காரில் சென்ற 5 பேர் விபத்தில் பலி!

மதுரை அருகே நடந்த கார் விபத்தில், சமயபுரம் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலூர் அருகே இந்த கோர…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் அதிரடி: ஒன்றிய அரசு இனி இந்திய அரசு!

தமிழக முதலமைச்சர் விஜய், இனி மத்திய அரசை 'இந்திய அரசு' என்று குறிப்பிடுவார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?